Monday, November 11, 2013

பிள்ளையாரிடம் மனு கொடுத்த பக்தர்
கடவுளுக்கே வெளிச்சம்...:
அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை வண்ணாரப்பேட்டை வரதராஜ பொருமாள் கோவிலுக்கு சொந்தமான எட்டு ஏக்கர் நிலம் அபேஸ் செய்யப்பட்டது. தனியாரின் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள இந்த கோவிலையும் நிலத்தையும் மீட்டுத்தர கோரி அறநிலையத்துறைக்கு மனு கொடுத்தும் பலனில்லாததால் நேற்று அறநிலையத்துறை அலுவலகத்தில் உள்ள கோவிலில் பிள்ளையாரிடம் மனு கொடுத்த பக்தர். அதிகாரிகள் கை(யூட்டு)விட்டாலும் கடவுள் கைவிடமாட்டார் என்பதே இவரின் நம்பிக்கை. கடவுளுக்கே வெளிச்சம்...!

நன்றி --- இந்துமதம் நமது தாய் மதம்

No comments:

Post a Comment