Monday, November 4, 2013

யாரை ஏமாற்றும் வேலை .
தமிழர்களுக்கு மதமில்லை .
மீண்டும்  வருகின்றது  செத்து போன திராவிட கழகத்தின்  இந்து மத கடவுள் மறுப்பு கொள்கை


நாம் தமிழர் என்கின்ற உணர்வுடன் ஒன்று படவேண்டும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் இயக்குனர் சீமானின் பேச்சு.
இது உண்மை தானா? அல்லது தமிழர்களை ஏய்க்கும் பேச்சா ??
என்  பாட்டன் ராஜேந்திர சோழன்  முப்பாட்டன் ராஜராஜ சோழன் என்று கூறும் சீமான் ஏன் தமிழர்களுக்கு மதமில்லை என்று கூறுகின்றார்.
சிந்திக்க வேண்டிய விஷயம் ????

ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும்  இந்து மதம் என்று இன்றைய காலகட்டத்தில் அறியப்படும் சனாதன தர்மத்தின்  இரு பெரும் பிரிவுகளான சைவக் கடவுள் சிவனுக்கும்  வைணவக் கடவுளான விஷ்ணுவிற்கும் கோவில்களை எழுப்பியும் மான்யங்கள் அளித்தும்  தமிழர்களின்   மதம்  இந்து மதம் என்று உலககிற்கு பறை சாற்றி உள்ளார்.

இந்த நிலையில் தமிழர்களுக்கு மதமில்லை  என்று
நாம் தமிழர் கட்சியின் தலைவர் இயக்குனர் சீமானின் பேச்சு சந்தேகத்தை எழுப்புகின்றது.

ஒரு வேளை சர்ச் கட்டியிருந்தால் இப்படி  பேசமாட்டார் என்று கருதுகின்றேன் .

 செத்து போன திராவிட கழகத்தின்  இந்து மத கடவுள் மறுப்பு கொள்கை   தமிழருக்கு மதமில்லை  என்கின்ற வடிவத்தில் மீண்டும் உயிரூட்டி விரைவில் பணம் சேர்க்க சீமான் திட்டமிட்டு வேலை செய்வதாக தெரிகின்றது.

தமிழர்களே விழித்து கொள்ளுங்கள் .  முன்னோர்களான நம் தமிழர்களுடைய மதம் இந்து மதம் தான் . இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்

No comments:

Post a Comment