தங்கள் நிர்வாக சீர்கேடுகளாலும் ஊழல் காரணங்களாலும் சீரழிந்த இந்திய பொருளாதாரத்தை காரணம் காட்டி கோவில் சொத்துக்களை பலி கேட்கும் மத்திய அரசின் யோசனையை பாரத சமூகம் கடுமையாக எதிர்க்கிறது.
காந்தி பெயரை வைத்துக்கொண்டு இந்திய பொருளாதாரத்தை சீரழித்த இந்திரா காந்தி குடும்பத்தாரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்
--முதலில் ஊழல் கறைபடிந்த அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் சொத்துக்களை (சுவிஸ் வங்கி முதலீடுகள் உட்பட) கைப்பற்ற வேண்டும்
--2008 ல் ஏற்பட்ட பொருளாதார சுணக்கத்தை காரணம் காட்டி கார்பரேட்களுக்கு கொடுக்கப்பட்ட லட்ச கணக்கான கோடிகள் பணத்தை வசூல் செய்ய வேண்டும்.
-- தேசத்திற்காக செயல்படுகிறோம் என்று சொல்லும் கட்சிகளின் சொத்துக்களை எடுத்து கொள்ளட்டும்.
-- கொடூரமான செயல்களில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் இருக்கும் தீவிரவாதிகள், குற்றவாளிகள், ரவுடிகள் உள்ளிட்டோரின் சொத்துகளை பறிமுதல் செய்யட்டும்
-- வரி ஏய்ப்பு, மோசடிகளில் ஈடுபட்ட நிறுவனங்களையும் அதன் தலைவர்கள் சொத்தையும் எடுக்கட்டும்
இவையனைத்தையும் விட்டுவிட்டு காலம் காலமாக மன்னர்களும், சாமானிய மக்களும் வேண்டுதலாகவும் காணிக்கையாகவும் சிறிது சிறிதாக அளித்த சொத்துக்களை கைப்பற்ற நினைப்பது மறைமுக கொள்ளை என்றே நினைக்க தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக இந்து கோவில்களை மட்டும் குறிவைப்பது மத்திய அரசின் மத காழ்ப்புணர்ச்சியை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது. கோவில் சொத்துகளை கொள்ளையிட வந்த அந்நியர்களிடம் இருந்து காப்பதற்காக தங்கள் இன்னுயிரை விட்ட லட்சக்கணக்கான இந்தியர்களின் வரலாறு மறைக்கபட்டதே ஹிந்து மக்களின் இன்றைய அமைதிக்கு காரணம்.
இந்துக்கள் விழித்துக் கொண்டோம் . இன்னும் எங்களை ஏமாற்ற முடியாது. பணத்திற்காக உங்கள் காலடியில் கிடக்கும் சில இந்துக்களை பற்றி கவலை இல்லை

No comments:
Post a Comment