Tuesday, August 6, 2013

 

வங்கதேச கலவரமும், இந்து மனசாட்சியும்
-------------------------------------------------------------
பெருமையும், பாரம்பரியமும் உள்ள ஸில்ஹட், ரங்பூர் , தாகுர் காவ் ,லக்ஸிமிபூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இந்து வழிபாட்டு ஆலயங்கள் இடித்து தள்ளப்பட்டுள்ளன. இதுவரை கலவரத்தில் 86 க்கும் மேற்பட்ட அப்பாவி இந்துக்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ளனர். இதெல்லாம் சென்ற இரு வாரங்களுக்குள் நடந்தது. நமக்கு பெரும் தலைவலியாகவும், நம் நாட்டில் கலவரத்தை தூண்டிவிட்டும் குண்டு வைத்தும் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் அண்டை நாடான பங்களா தேஷ்ஷில் தான் இத்தனை அநியாயமும், படுகொலையும் நடை பெறுகிறது.

மதச்சார்பின்மை, வெங்காயம் , பச்சை மிளகாய் என பேசும் திராவிட தறுதலைகளோ, கம்யூனிஸ கருத்துக் குருடர்களோ இதைப் பற்றி வாயே திறக்காமல் ஊமை கனவு கண்டது போல மற்ற விஷயங்களைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். ஊடகங்கள் இது பற்றிய செய்திகளை வெளியிடாமல் தன் மதச்சார்பின்மை வேடம் கலைந்து விடாமல் காபந்து செய்திகளையும், வெறும் சாவு எண்ணிக்கையையும் மட்டும் தெரிவிக்கும். அதையும் இடக்கரடக்கலாக பங்களாதேஷில் உள்ள சிறுபான்மையின மக்கள் மீது தாக்குதல், சாவு எண்ணிக்கை 86 ஆக உயர்வு என்பதை தாண்டி வேறு விரிவான செய்திகள் இருக்காது .

ஜமா அத்தே இஸ்லாம் என்ற பயங்கரவாத அரக்க இயக்கத்தின் கொலை வெறி குண்டர்கள் கொடுர ஆயுதங்களோடு கூட்டம் கூட்டமாக வந்து தாக்குதல் நடத்துகிறார்கள். கூட்டமாக வந்து கையில் அகப்படும் அப்பாவி இந்து சிறுமிகளை கற்பழிக்கிறார்கள். கூட்டு வன்புணர்வு செய்கிறார்கள். பின்பு அவர்களை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்கிறார்கள்.இந்துக்களின் வழிபாட்டு இடங்களுக்குள் பயங்கரமான ஆயுதங்களோடு நுழைந்து உள்ளிருக்கும் அப்பாவிகளை அரிவாளாலும், கட்டையாலும் அடிக்கிறார்கள். (http://www.youtube.com/watch?v=CVNF4CxNHqQ )வெட்டுகிறார்கள். உயிர் பயத்தோடு வெளியேறும் பெண்களையும் , குழந்தைகளையும் வேட்டை நாயின் வெறியோடு வெட்ட வெளியில் வன்புணர்வு செய்கிறார்கள். எரியும் தீயில் தூக்கி வீசுகிறார்கள். தாங்கள் பெற்று வளர்த்த பிள்ளைகள் தாயின் முன்னேயே சிதைத்து தீ வைக்கும் கொடூரத்தை கண்டு நடை பிணமாக அலை மோதுகிறார்கள். தங்களின் உழைப்பால் உருவான வீடுகளை தீக்கு தின்னக்கொடுத்து விட்டு பிச்சைக்காரர்களாக அலையும் இந்துக்களின் ஓலம் எங்கும் ஒலிக்கிறது. (http://www.youtube.com/watch?v=kTMhu5EuXOw ).

காவல் துறையில் முறையிடலாம் என்றால் அங்குள்ள பெரும்பான்மையான காவலர்களும் கலவரத்துக்கு துணை செய்பவர்களாகவே தான் இருக்கிறார்கள் என்கிறார்கள் மக்கள் ( ஆதாரம் : மேலே உள்ள வீடியோவை பாருங்கள்). சிறுபான்மையின இந்துக்களாக ஒடுங்கிப்போயுள்ள மக்கள் வசிக்கும் இடத்தில் கூடி அவர்களின் இருப்பைடத்தை சூறையாடுவதோடு நில்லாமல் அவர்களின் குழந்தைகளை அடிப்பது , துன்புறுத்துவது , சிறிய பெண்குழந்தைகள், முதிய பெண்மணிகள், இளமையான, இல்லத்தரசிகள், நடுத்தர வயது தாய்மார்களை அடித்தும் , பாலியல் ரீதியாக வதைத்தும் சித்ரவதை செய்யும் ஜமாத்ஷிபிர் -ன் கொலைகார பாலை சாத்தானின் படையை கண்டாலே குலை நடுங்குகிறது . அப்பாவி சிறுபான்மை இந்துக்களுக்கு , இவர்களின் வன்முறை வெறியாட்டத்திற்கு பின் எடுக்கப்பட்ட வீடியோவை (http://www.youtube.com/watch?v=1U0sZ8U6njk )பாருங்கள்.

எவ்வளவு வெறுப்பிற்கும் , வன்மத்திற்கும் இடையே அவர்கள் வாழ்கிறார்கள் என்ற உண்மை புரியும். இந்த சாத்தானின் படையை வன்முறையற்ற அன்பேசிவம் என்று வாழும் இந்துக்களால் எதிர் கொள்ள முடியுமா? (http://www.youtube.com/watch?v=7uIhiQCG-CE ) . பள்ளி வாசலில் இருந்து தொழுது விட்டு வந்து கொலையை செய்து முடித்து விட்டும் , அப்பாவிகளை அடித்து விட்டும், இளம் பெண்களை கற்பழித்து விட்டும் , தேசிய சொத்துக்களை சிதைத்து சீர் குலைத்து விட்டும் வங்காள மணணுக்கு இந்து ரத்தத்தால் பலி கொடுத்து மண்ணை சிவப்பாக்கி மகிழ்கிறார்கள் (http://www.youtube.com/watch?v=9zae5_3HSHk ). இதை கேட்க நாதியற்ற சமூகமாக ஒடுங்கிப்போய் இருக்கிறது. அண்டை நாடான இந்தியாவோ முதுகெலும்பற்ற, கயமைத்தனம் நிரம்பிய காங்கிரஸ் களவாணிகளால் ஆட்சி செய்யப்படுவதால் எந்த ஆதரவும் இல்லாமல் மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். எங்கேயோ இருக்கும் பாலஸ்தீனியர்களுக்கு குரல் கொடுக்கும் தேசம் தன் காலடியில் நம் சொந்த இந்து சகோதரர்கள் பாதிக்கப்படுவதை கை கட்டி வெக்கமில்லாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரோ இது பங்களாதேஷின் சிறிய பிரச்சினை இதை எல்லாம் நாம் ஒன்றும் செய்ய முடியாது என்று லும்பத்தனமாக பேசுகிறார். (http://www.aninews.in/videogallery4/10230-bangladesh-capable-of-handling-riots-over-war-crimes-verdict-khurshid.html).

வெளியுறவுத்துறை அமைச்சகம் என்ற ஒன்று சாராயம் குடிப்பதற்கும், ஊழல் செய்து கொள்ளை அடித்த பணத்தை கொண்டு போய் வெளி நாடுகளில் பதுக்குவதற்கும் மட்டும் தானா? . அமெரிக்காவிற்கு அடி வருடுவதற்கு மட்டும் தானா இருக்க வேண்டும். தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும், கேரள மீனவர்கள் கொலை செய்யப்பட்டாலும் , லிபியாவிலும், கனடாவிலும் சட்ட விரோதமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களை பற்றி ஒன்றும் பேசாது. அமெரிக்காவால் நம் மதிப்பிற்குரிய தேச தலைவர்கள் நிர்வாணப்படுத்தி அவமதித்தாலும் ஒன்றும் செய்யாது. சவூதி அரேபியாவிற்கு ஆயிரக்கணக்கான இளம் பெண்களை விபச்சாரத்திற்காக கடத்தி கொண்டு போனாலும் ஒன்றும் செய்யாமல் எருமை மாட்டு சாணி போல இருப்பதற்கு எதற்கு ஒரு கேடு கெட்ட துறை. இதன் ஊழியர்களுக்கு சம்பளம். இந்த வெக்கங்கெட்ட தன்மைக்கு ஒரு அமைச்சகமும், ஒரு அமைச்சரும். வெக்கமாக இல்லை காங்கிரஸ் கயவர்களே உங்களுக்கு. கம்யூனிஸ்ட்கள் அதற்கு மேல் சீதாராம் எச்சூரி அவர்களின் கோரிக்கை நியாயமானாலும் கூட வன்முறை தீர்வல்ல என்கிறார். என்ன விதமான ஜல்லி இது பாருங்கள். குஜராத் கோத்ராவில் இஸ்லாமியர்களால் ஏற்படுத்தப்பட்ட கலவரத்திற்கு சில தடுப்பு நடவடிக்கை எடுத்த இந்துக்கள் மீது என்ன என்ன பொய் புனைவுகளை சொல்லி கேவலப்படுத்தினீர்கள். மதம் என்பது அபின் என்று சொல்லி விட்டு வெக்கமில்லாமல் முஸ்லீம் லீக்கோடும் குண்டு வைக்கும் அப்துல் நாசர் மதானியின் கட்சியோடும் கூட்டணி வைத்த கயவர்கள் தானே நீங்கள். 25 நிமிடங்கள் கொடுங்கள் இந்திய இந்துக்கள் அனைவரையும் கொன்று ஒழித்து விடுகிறேன் என்று சொன்ன ஒவைஸியை (http://www.youtube.com/watch?v=BXFFR8NXG1E) கண்டிக்க துப்பில்லாத , கையலாகாத கோழைகள் தானே நீங்கள் . உங்களிடம் நியாயத்தையோ, நீதியையோ எதிர்பார்ப்பது நிச்சயம் நடக்காது.

இளம் இந்து , பெளத்த குழந்தைகளையும், பெண்களையும் கற்பழித்து கொலை செய்வது இப்போது மட்டுமல்ல 1971 ல் இந்த தேசம் பிறந்ததிலிருந்து தொடரும் ஒரு மிருக வெறி தான் . சமீபத்தில் இளஞ்சிறுமிகளை எப்படி கொடூரமாக கற்பழித்தார்கள் என்பது பற்றி மனித நேய சிந்தனையாளர் திருமதி .தஸ்லீமா நஸ்ரினின் வாக்கு மூலத்தை கேளுங்கள் (http://www.youtube.com/watch?v=2-PHptpS01E ).இந்த வீடியோ வாக்கு மூலத்தில் தங்கள் குழந்தைகளை ஒவ்வொருவராக நாசம் செய்யுங்கள். கூட்டாக கற்பழிக்க வேண்டாம் என மன்றாடும் தாயை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. மன சாட்சியுள்ள யாரும் இது பற்றிய தங்கள் கண்டனங்களை பதிவு செய்திருப்பார்கள். அப்படி ஏதாவது இருக்கிறதா என்று இணையம் முழுக்க தேடி பாருங்கள் இந்துக்களே. பாவப்பட்ட இந்துக்களுக்கு குரல் கொடுக்க யாருக்கும் மனமில்லை.

பாரதம் துண்டாடப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக வன்முறைக்கும், பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள் இந்த மக்கள். நவகாளி யாத்திரை மூலம் இவர்களுக்கு கிடைக்க இருந்த நீதியை காந்தி தட்டி விட்டார் என்று வரலாறு குற்றம் சாட்டுவதை கேளுங்கள். 1964ல் கிழக்கு பாகிஸ்தான் என்ற கேவலத்தில் இவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். பின்னர் 1971ல் கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேசமாக மாறியதை அடிப்படைவாத இஸ்லாமியர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் கலவரத்தை தூண்டி விட்டு குளிர் காய்ந்தனர். கிடைத்த இடைவெளியில் முடிந்த அளவு சுமாராக ஒரு 30 லட்சம் இந்து மக்களை கொன்று கொலை செய்து தங்கள் ரத்த வெறியை தீர்த்துக்கொண்டனர்.( http://www.kean.edu/~bgsg/Conference09/Papers_and_Presentations/Anis%20Ahmed_Paper_OperationSearchlight.pdf ) .

இஸ்லாமிய கொலை வெறி தாண்டவத்தின் கோர சாட்சியங்கள் வரலாறுகளிலும் , மக்கள் மனதிலும் அழியாத பயத்தடயங்களாக நிலை பெற்று இருக்கிறது. 1946, 1964, 1971, 1998 , 2001 2008 , 2009, 2012, மற்றும் இப்போதும் தொடரும் 2013 வன்முறையிலும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் இந்துக்களை பாருங்கள் (http://alalodulal.org/2013/03/03/bengali-hindus/). சாக்கடையில் உழலும் பன்றிகளை விட கேவலமாக இவர்கள் நடத்தப்படுகிறார்கள். எந்த உரிமையும் இல்லாமல் ஓட ஓட விரட்டப்படுகிறார்கள்.

இத்தனை பிரச்சினை ஏன் ஏற்பட்டது என்றால் பாரதத்தைத் துண்டாட அப்போதைய தேசத்தலைவர்கள் ஒப்புக்கொண்டதாலேயும், இன்ன சில முற்போக்கான முட்டாள்தனங்களாலும் தான் ஏற்பட்டது . இப்போதைய கலவரத்துக்கு காரணம் 1971 ஆம் ஆண்டு அடிப்படைவாதிகள் தாங்கள் பாகிஸ்தானுடன் இணைந்து இருந்து கொண்டு வெறி கொள்ள வைக்கும் ஷரியா சட்டங்களை கைக்கொண்டு காட்டுமிராண்டிகளாக வாழ வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டு , சுதந்திரத்தையும், சுய மரியாதையையும் எதிர் பார்த்த மக்களை கொன்று குவித்தனர். அப்பாவி இந்துக்களினால் தான் இவர்கள் தூண்டப்படுகிறார்கள். ஏனெனில் இந்து மதம் , இந்து வாழ்க்கை முறை என்பது சுதந்திரமான சிந்தனையையும், அறிவையும் கோருவது. நாத்திகத்தையும் தன் தரப்பாக கருதிக்கொண்டு அதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா என்பதை கனிவோடு கவனிக்க கூடியது. பிற மதத்தவர்களையும் மனிதர்களாக கருதச்சொல்வது எனவே இந்து மதத்தையும் , இந்து சிந்தனை முறை , வாழ்க்கை முறை இவற்றை அழிப்பதன் மூலமாகவே காட்டுமிராண்டித்தனத்தை மனிதர்கள் மீது திணிக்க முடியும் என்ற முடிவுக்கு இஸ்லாமிய அடிப்படை வாதிகள் வருகிறார்கள். பின்பு கோர கொலை தாண்டவம் ஆடுகிறார்கள். சமீபத்தில் நடந்த ஈழ இனப்படுகொலையைப்போல பல மடங்கு வீரியமான ,கொடுரமான இனப்படுகொலையை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடத்தி இந்துக்களையும் , சுய சிந்தனை இருந்த இஸ்லாமியர்களையும் இன சுத்திகரிப்பு செய்தனர். (http://en.wikipedia.org/wiki/1971_Bangladesh_atrocities).

அடிமைத்தனத்திற்கும், காட்டுமிராண்டித்தனமான சட்ட திட்டங்கள், மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக திரண்டெழுந்த கிழக்கு வங்க மக்களை ஒடுக்குவதற்காக பாகிஸ்தானிய ராணுவம் கட்டவிழ்த்து விடப்பட்டது. பாக் ராணுவத்திற்கு சொல்லப்பட்டது என்ன என்றால் இஷ்டப்படி கற்பழியுங்கள், கொலை செய்யுங்கள். சிறுவர் சிறுமியர் எந்த வித்யாசமும் பார்க்காதீர்கள். இந்துக்களை கற்பழித்து கொன்றால் மேலும் பதக்கங்கள், பரிசுகள், கொள்ளையடிக்கும் சொத்துக்களை நீங்களே அனுபவியுங்கள் என்றெல்லாம் யாஹியா கானும், ஜெனரல் டிக்கா கானும் உத்தரவிட்டார்கள். கொலை செய்வதையும் ,கற்பழிப்பதையும் செய்முறையோடு மதராசாவில் பயிற்று வைத்தார்கள். உள்ளூரில் வெறி பிடித்த அடிப்படைவாதிகளையும், கொலைகாரர்களையும் இணைத்துக்கொண்டார்கள். வரலாற்றின் கறுப்பு பக்கங்களில் இடம் பெற்ற ரஜாக்கர்களின் வெறியாட்டம் ஆரம்பித்த கதை இது. உருது பேசும் பாகிஸ்தானிய அடிப்படைவாத முஸல்மான்கள் நாடெங்கிலும் கொள்ளை, கொலை , வன்முறை வெறியாட்டங்களோடு கற்பழிப்புக்களை கூட்டம் கூட்டமாக செய்தனர். அவர்களின் காட்டுமிராண்டித்தனமான பாலியல் இச்சைகளுக்கு லட்சக்கணக்காண இந்து பெண்களும், சிறுமியர்களும் , பெளத்த ,சிறுபான்மை இஸ்லாமிய பெண்களும் ஆளாயினர்.

ரஜாக்கர்கள் என்பவர்கள் வங்க தேச வரலாற்றில் துரோகிகள் என பொறிக்கப்பட்டது இப்படித்தான். பாரதத்திற்கு இஸ்லாமிய வெறியர்களின் காட்டுமிராண்டித் தாக்குதல் தாள முடியாமல் அகதிகளாக 30 லட்சத்திற்கு மேல் மக்கள் குவிந்தனர். இத்தனையையும் யாரோ சொல்லவில்லை. இனப்படுகொலைக்கு எதிரான மனித நேய மன்றத்தில் சாட்சியமளித்தவர்களின் சாட்சிகளிலிருந்தும் ,ஆவணங்களில் இருந்தும் சொல்லப்படுகிறது ( காண்க: போர்குற்ற ஆவணங்கள் : http://muktadhara.net/page35.html ) . ஆண்கள் கலவரக்காரர்களால் வேட்டி, உள்ளாடைகளை விலக்கி பார்ப்பார்கள். சுன்னத் எனும் மார்க்கசீர் செய்யாதவர்களை கழுத்தை அறுத்து கொன்றோம். (புகழ் பெற்ற புகைப்படம் பாக் .ராணுவவீரன் சிவிலியன் ஒருவரை வேட்டியை விலக்கி பார்ப்பார் அது 1971 ல் எடுக்கப்பட்டது தான்.)பெண்களை கூட்டம் கூட்டமாக நிறுத்தி வைத்து கும்பலாக கற்பழித்தோம். சிறுமிகள் தான் எங்களின் இலக்கு அவர்களின் கதறல் எங்களுக்கு மிக இனிமையாக இருந்தது என பெருமையோடு பேசும் பாகிஸ்தானிய வீரனின் வாக்குமூலமும், ரஜாக்கர்களின் கொக்கரிப்புகளையும் ஆவணப்படுத்திய அதிகாரிகளே அதிர்ந்து போய்விட்டனர் . (மியாவின் வாக்குமூலம் : http://www.bangladeshmariners.com/HmdrRprt/violat.html ).

ஆப்ரேஷன் சர்ச்லைட் என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவமும், அடிப்படைவாத சிந்தனையில் ஊறி இருந்த முஸ்லீம்களும் சேர்ந்து சொந்த நாட்டு மக்களை ஈவு ,இரக்கமின்றி கொலை செய்து , அவர்கள் குடும்பங்களை சிதைத்து அந்த எலும்புக்கூடுகளை தங்களின் மரணத்தின் பின்னால் செல்ல இருந்த சொர்க்கத்துக்கான பாஸ் என்று பெருமைப்பட்ட ராஜக்கர்களின் முண்ணனி தலைவன் தான் தொலாவர் ஹிசைன் சையதி. இவர் எப்படிப்பட்ட வீரன் என்றால் தன் கையாலேயே 1000 க்கும் மேற்பட்டவர்களை கற்பழித்தவன் என்று பெருமைபட சொல்லியவன். டெல்வர் ஹிசைனின் இந்து வெறுப்பும், பெண்கள் மீதான வெறுப்பும் மிக சாதாரணமாக நெட்டில் கிடைக்கும் பாருங்கள். (http://bd71.blogspot.in/search/label/Traitor )அவன் குற்றம் நிருபிக்கப்பட்டு அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு பதிலடியாக அவன் சார்ந்த அடிப்படைவாத , தீவிரவாத அமைப்பான ஜமாத் ஏ இஸ்லாமி அப்பாவி மக்கள் மீதும் இந்துக்கள் மீதும் தங்கள் வெறுப்பை காண்பித்து இத்தனை அக்கிரமங்களையும் செய்கிறது. இதனை தட்டி கேட்க யாருக்கும் துப்பில்லாதது தான் பிரச்சினையாக இருக்கிறது.பங்களாதேஷின் இன ஒழிப்பு ஆவணங்கள் (http://www.genocidebangladesh.org/ ) போர்குற்ற ஆவணங்கள் , லட்சக்கணக்கான சாட்சிகளின் அடிப்படையில் தான் இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது . அதற்கு தான் இத்தனை அழிச்சாட்டியம் செய்கிறார்கள். அறிஞர்களையும், பெண்களையும் தேடி தேடி கொன்றார்கள் .(http://muktadhara.net/page42.html ).இந்துக்களுக்கு எதிராக நிகழ்ந்த மிக கோரமான இன ஒழிப்புக்கு 42 வருஷம் கழித்து ஒரு நீதி கிடைப்பதை சகிக்காத காட்டு மிராண்டிகள் இப்படியான கொலைகளை செய்கிறார்கள்.

2008ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது 1971ல் போர்க்குற்றங்கள் புரிந்தவர்கள் மீதான சிறப்பு விசாரணை ஆணையம் நியமிப்பதாக வாக்களித்து ஆட்சிக்கு வந்தார் ஹசீனா பேகம். அதன்படி 2010ம் ஆண்டு 3 உறுப்பினர்கள் கொண்ட பன்னாட்டு போர்க்குற்ற நீதிமன்றம், 7 உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக் குழு, 12 உறுப்பினர்கள் கொண்ட வழக்கறிஞர்கள் குழு ஆகியவை உருவாக்கப்பட்டன.

1971 போர்க் குற்றவாளிகளான ரஜாக்கர்களில் பலர் ஜமாத்-இ-இஸ்லாமி என்ற இசுலாமிய மதவாத கட்சியின் மூலம் அரசியலில் வளர்ந்தனர். 2001ம் ஆண்டு தேசியக் கட்சி கூட்டணி ஆட்சியில் ஜமாத்-இ-இஸ்லாமியும் பங்கு பெற்றிருந்தது. ‘மீர்பூரின் கசாப்பு கடைக்காரர்’ என்று அழைக்கப்படும் அப்துல் காதர் முல்லா இப்போது ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவராக உள்ளார்.

போர்க்குற்ற நீதிமன்றம், பாகிஸ்தானுக்கு ஓடிப் போய் விட்ட அப்துல் கலாம் ஆசாத் என்ற போர்க்குற்றவாளிக்கு ஜனவரி மாதம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பிப்ரவரி 5ம் தேதி அப்துல் காதர் முல்லாவின் குற்றங்களை உறுதி செய்து மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது போர்க்குற்ற நீதிமன்றம். அப்துல் காதர் நீதிமன்றத்திலிருந்து வெளி வரும் போது ஆணவமாக சிரித்துக் கொண்டே வெற்றிக் குறியீடாக இரண்டு விரல்களை காட்டினார். ‘அவர் செய்த குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை மிகவும் குறைவானது’ என்று பெரும்பான்மை மக்கள் கொதித்தனர்.

பங்களாதேஷின் ஒவ்வொரு குடும்பமும் 1971 போர்க் குற்றங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அப்துல் காதரின் வெற்றிக் களிப்பைக் கண்டு கோபமடைந்த லட்சக்கணக்கான இளைஞர்களும், பெண்களும், பொது மக்களும் அவருக்கும், போர் குற்றத்துக்காக குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் 11 பேருக்கும் மரண தண்டனை விதிக்கக் கோரி தலைநகர் டாக்காவில் உள்ள ஷாபாக் சதுக்கத்தில் கூடி ஆர்ப்பட்டம் நடத்தினர்.

போர்க்குற்றங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஷாபாக் சதுக்கத்தில் தொடர்ந்தன. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக எழுதிய ரஜீப் ஹைதர் எனும் நாத்திக வலைப் பதிவரை ஜமாத் ஏ இஸ்லாமி கட்சி குண்டர்கள் பிப்ரவரி 15ம் தேதி படுகொலை செய்தனர். ரஜீபின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மத பயங்கரவாதிகளுக்கு எதிராக தமது ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இதன் பின்னர் தான் டொலவர் ஹிசைனிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது . இஸ்லாமியர்களிலும் இருந்த சில நல்லவர்களும், நடுனிலையான மக்களும் இந்த கோழைகளுக்கும் ,பேடிகளுக்கும் எதிராக பொங்கியதாலேயே இந்த அளவாவது வந்திருக்கிறது.

இந்த மரண தண்டனையை சாக்காக வைத்து இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனைகளை வளர்க்கவும், அப்பாவி இந்துக்களை கொன்று ஒழிக்கவும் களமிறங்கி இருக்கிறார்கள் . இந்து வணிகர்களை அடிப்பதும், பொருட்களை சேதப்படுத்துவதும், அவர்களின் சொத்துக்களை சூறையாடுவதும். இந்து பெண்களை கற்பழிப்பதும், தீ வைத்து எரிப்பதுமாகவும், ஆண்களை மிருகத்தனமாக தாக்குவதாலும் தங்களை நிலை நிறுத்தி கொள்ள பயங்கரவாத அமைப்புகள் முயற்சிக்கின்றன. பெரும்பான்மையான மக்களில் ஒரு பகுதியினராவது இவற்றை ஆதரிப்பதில்லை என்பது ஒரு சிறிய ஆறுதல் . ஆனால் இந்தியா மாதிரியான ஒரு அண்டை தேசம் சாவது இந்துக்கள் தானே அதை ஏன் எதித்து கேட்க வேண்டும் என்று சொரணையில்லாமலும் , மனித நேயமில்லாமலும் இருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது. சிறுபான்மையின முஸ்லீம்கள் அரேபியாவிலோ, ஆப்கானிஸ்தானிலோ, பாலஸ்தீனத்திலோ செத்தால் ஒப்பாரி வைக்கும் இந்திய எச்சில் பொறுக்கி அரசியல் பிழைப்பு நடத்தும் கட்சிகள் இதை பற்றி கருத்து சொல்லாமல் செவிட்டு ஊமைகளாக த்தான் இருக்கும். கொஞ்சம் மனசாட்சி மிச்சம் இருக்கும் மனிதர்கள் யாராவது தான் இது தொடர்பாக பொது வெளியில் பேச வேண்டும். அந்த அப்பாவி மக்களுக்காக நம் வாயை கொஞ்சம் அசைப்போம். நம் சொந்த சகோதரர்கள் மரணித்து கொண்டிருக்கும் போதும் வாய் மூடி மெளனியாக இருந்து என்ன சாதிக்க இருக்கிறோம்.

இந்தியா போன்ற தேசத்தில் மதச்சார்பின்மை என்றால் இந்து மத வெறுப்பு என்று பொருள் கொள்ளப்பட்டுள்ள இடத்தில் நமக்காக பேச அரசியல் வாதிகளோ, மதத்தலைவர்களோ இருக்க மாட்டார்கள். பத்திரிக்கைகளுக்கும் ,ஊடகங்களுக்கும் காசு கொடுத்து கூலிக்கு மாரடிக்க வைக்க இந்து சமயத்திடம் பெட்ரோல் பணமோ, கஞ்சா விற்ற பாவப் பணமோ இல்லை. எனவே மக்களே உங்களிடம் கையேந்தி கேட்கிறது இந்து சமூகம் கண்ணுக்கு முன்னால் நிகழும் அக்கிரமங்களை தயவு செய்து தட்டி கேளுங்கள். நாளை நம்முடைய நாளாக இருக்கும் .

” பாதகம் செய்பவரை கண்டால்
பயம்கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா -

- பாரதி

No comments:

Post a Comment