"தமிழகத்தில்,
31 ஆண்டுகளாக இந்து அமைப்பு தலைவர்கள் மீது, தாக்குதல் நடத்துவது
தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாட்டின் துணை பிரதமராக இருந்த, அத்வானி முதல்
நகராட்சி வார்டு கவுன்சிலர் வரை, உயிருக்கு குறி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில், பலர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்' என, இந்து அமைப்புகள்
குற்றம் சாட்டுகின்றன.
தாக்குதலுக்கு உள்ளானோரின் விவரங்களை, 1982ம் ஆண்டு முதல் அவர்கள் வெளியிட்டுள்ளனர். இதில், முதலில் குறி வைக்கப்பட்டவராக, பா.ஜ.,வின் மறைந்த தலைவர், ஜனா கிருஷ்ணமூர்த்தி உள்ளார். கோவையில், அவர் மீது தாக்குதல் நடந்தது.இந்து அமைப்பினர் மீது நடந்த தாக்குதல்கள், பெரும்பாலும், கோவை, மதுரை, சென்னை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் தான், அதிகம் நடந்துள்ளன.இத்தாக்குதலில்,
ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம், இந்து முன்னணி அலுவலகம் ஆகியனவும்,
இலக்கானதாகவும் குறிப்பிடுகின்றனர்.சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த
தாக்குதல், ஓராண்டாக அதிகரித்துள்ளதாக கூறும் இந்து அமைப்புகள்,
அத்வானியைக் கொல்ல, தமிழகத்தில் இரு முறை முயற்சி நடந்துள்ளது என்கின்றனர்.
ஓராண்டில், இந்து அமைப்பு தலைவர்களின் கொலை வழக்குகள் சிலவற்றை, அவர்கள்
ஆதாரமாக முன் நிறுத்துகின்றனர்.
முருகன்
பரமக்குடி பெரியகடை பஜாரில், தேங்காய் கடை நடத்தி வந்தவர், பா.ஜ.,வின் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் முருகன். கடந்த மார்ச், 19ம் தேதி மதியம், 3:00 மணிக்கு, மர்ம நபர்களால், பைப் குண்டுகள் வீசியும், பயங்கர ஆயுதங்களால் வெட்டியும் கொல்லப்பட்டார். நிலத் தகராறு காரணமாக, முருகன் கொல்லப்பட்டதாக, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட, ராஜாமுகமது, மனோகரன், ரபீக் ராஜா, சாகுல் அமீது ஆகியோர், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வழக்கு தொடர்கிறது.
புகழேந்தி
நாகப்பட்டினம், நீலா தெற்கு வீதியைச் சேர்ந்தவர், புகழேந்தி, 51; கடப்பா கல் வியாபாரி. பா.ஜ.,வின் மாநில செயற்குழு உறுப்பினர். 2012, ஜூலை, 4ம் தேதி காலை, நடைப்பயிற்சியின் போது, நாகப்பட்டினத்தை சேர்ந்த சந்திரசேகரன், முனிஸ்வரன், கொரசேகர்
மற்றும் கார்த்தி ஆகியோரால், வெட்டிக் கொல்லப்பட்டார். சந்திரசேகரன் உள்ளிட்ட நால்வரும், தற்போது ஜாமினில் உள்ளனர். இதற்கு பின், வழக்கு எந்தக் கோணத்தில் பயணிக்குமோ என்று, பா.ஜ.,வினர் சந்தேகப்படுகின்றனர்.
அரவிந்த் ரெட்டி
பா.ஜ.,வின் மருத்துவ அணி மாநில செயலராக இருந்தவர், மருத்துவர் அரவிந்த் ரெட்டி, 35; இவருக்கு, வேலூரில் பல கிளினிக்குகள் உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில், வேலூர் தொகுதியில், போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.பா.ஜ., சார்பில் இலவச மருத்துவ முகாம், சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்கள் நடத்தி, கட்சியை வளர்த்தவர். வேலூரில் உள்ள இவரது, "இந்துஸ்தான் கிளினிக்'கில் இருந்து, 2012, அக்., 23ம் தேதி இரவு, 8:30 மணிக்கு, வீட்டுக்கு செல்ல காரில் ஏறிய போது, டாடா சுமோவில் வந்த மர்ம கும்பல், சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.வேலூர் ரவுடி வசூர் ராஜா, வேலூர் சிறையில் இருந்தபடியே, அரவிந்த் ரெட்டியை கொல்லும் திட்டத்தை தீட்டி, நிறைவேற்றியதாக போலீசார் கூறுகின்றனர். இக்கொலை தொடர்பாக, வசூர் ராஜா, வேலூர் ஓல்டு டவுன் குப்பன், பூபதி, மணி, ரங்கையன், கோபு, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.ஆனால், இவர்களின் கைதை குறை கூறும் பா.ஜ.,வினர், உண்மை குற்றவாளிகளை விட்டுவிட்டு, தொடர்பில்லாதவர்களை கைது செய்து, போலீசார் கணக்குக் காட்டி விட்டனர். இன்னமும் கொலைக்கான பின்னணியில், யார் என்று தெரியவில்லை என்று வேதனைப்படுகின்றனர்.
வெள்ளையப்பன்
நெல்லை மாவட்டம், துரைசாமியாபுரத்தை சேர்ந்தவர் வெள்ளையப்பன், 50. இவர், 20 ஆண்டுகளாக வேலூரில் தங்கி, இந்து முன்னணியின், முழு நேர ஊழியராக பணியாற்றியவர். வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலை, இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததை எதிர்த்து, போராட்டங்கள் நடத்தினார்.கடந்த, 1ம் தேதி மதியம், 3:30 மணிக்கு, வேலூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு, பைக்கில், வெள்ளையப்பன் வந்த போது, டாடா சுமோவில் வந்த ஒரு கும்பல், வெள்ளையப்பனை, 22 இடங்களில் வெட்டி படுகொலை செய்தது.இந்த கொலையில் தொடர்புடையவர்கள், நீண்ட நாட்கள் வேலூரில்
தங்கி, வெள்ளையப்பனின் நடவடிக்கைகளை கண்காணித்து, திட்டமிட்டு கொலை செய்ததாக, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆடிட்டர் ரமேஷ்:
பா.ஜ.,வின் மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ். இவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக, பல சமயங்களில், சேலம் மாநகர போலீசுக்கு, இந்து அமைப்புகள் தகவல் கொடுத்து, பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளன.மேலும், வேலூர் வெள்ளையப்பன் கொலைக்குப் பின், பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், ஜூலை 19ம் தேதியன்று, படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரது படுகொலைக்கான காரணம் பெரும் மர்மமாகவே உள்ளது. ஆனால், பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பதை பா.ஜ., மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் தெளிவாக தெரிவித்திருக்கிறார்.இந்த கொலைகள் நடந்தேறிய விதத்தில் நீண்ட நாள் திட்டம் இருந்தது என்றும், அக் கொலைகளில் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன என்பதும்இவர்கள் வாதம்.
இது குறித்து, பா.ஜ., தேசிய செயலர் தமிழிசை சவுந்திராஜன் கூறியதாவது:
கொலை செய்யப்பட்ட பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள், மிக கொடூரமாக, அரிவாளால் வெட்டியும், பெட்ரோல் குண்டுகள் வீசியும் தாக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, அவர்கள் நாள்தோறும் செல்லும் அலுவலகம் மற்றும் பொது இடங்களில் பின் தொடர்ந்து சென்று கொன்றுள்ளனர். சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறக்கும் வகையில், கொடூரமாக தாக்கியுள்ளனர். எந்த நேரத்திலும், அவர்களுக்கு முதலுதவி கிடைத்து, பிழைத்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக அத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இதற்காக நீண்ட நாள் திட்டமிட்டு, படுகொலைகளை அரங்கேற்றியுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.
ஆடிட்டர் ரமேஷ் படுகொலை குறித்து விசாரித்து, ஆராய, பா.ஜ., மேலிடக்குழு ஜாவடேகர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் விசாரணை நடத்தி, மாநில அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும்போது, அதில் கூறப்படும் விவரங்கள் மேலும் பல உண்மைகளைச் சொல்லும் என்றும், பா.ஜ., தரப்பில் கருத்து உள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் உட்பட, எல்லா கட்சிகளும் ஒருமித்த குரலுடன் அரசியல் படுகொலைகள் தடுக்கப்பட தெரிவித்த கருத்துக்கள், இக்கட்சித் தலைவர்கள் மத்தியில், அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment